/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி சட்டசபை தொகுதி வெற்றியை அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிப்போம் முன்னாள் அமைச்சர் சம்பத் பேச்சு
/
பண்ருட்டி சட்டசபை தொகுதி வெற்றியை அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிப்போம் முன்னாள் அமைச்சர் சம்பத் பேச்சு
பண்ருட்டி சட்டசபை தொகுதி வெற்றியை அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிப்போம் முன்னாள் அமைச்சர் சம்பத் பேச்சு
பண்ருட்டி சட்டசபை தொகுதி வெற்றியை அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் சமர்ப்பிப்போம் முன்னாள் அமைச்சர் சம்பத் பேச்சு
ADDED : அக் 26, 2025 03:17 AM

பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதி வெற்றியை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பாதத்தில் சமர்ப்பிப்போம் என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் அ.தி.மு.க., வின் 54ம் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் ராஜதுரை, முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், இணை செயலாளர் சத்யா கலைமணி, துணை செயலாளர் உமாமகேஸ்வரி ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி சீனுவாசன், ஷர்புன்னிசாசலாவூதீன், விஜயன், நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலு, நகர இளைஞரணி கருணாமூர்த்தி, பாசறை செயலாளர் குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பரந்தாமன், சிறுபான்மைபிரிவு புனியாமின்,மகளிரணி பூபதிமுருகன், மீனவரணி பாலு வரவேற்றனர்.
மாவட்ட அவை தலைவர் குமார், பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் நத்தம் கோபு, மாவட்ட இணை செயலாளர் கவுரிபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, நாகபூஷணம், தமிழ்செல்வன், சிவா, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், மேல்பட்டாம்பாக்கம் நகர செயலாளர் அர்ஜூனன், தொரப்பாடி பேரூர் செயலாளர் சுரேஷ், நகர துணை செயலாளர் ரகுபதி, ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம், தலைமை கழக பேச்சாளர் வையாபுரி, முகவை கண்ணன் பேசினர். இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், மருத்துவரணி தலைவர் சீனுவாசராஜா, கழக மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில்;
அ.தி.மு.க., ஆட்சியில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினார். தி.மு.க., அரசு கமிஷன் ஆட்சியாகவும். குடும்ப ஆட்சியாகவும் உள்ளது. போதை கலாசாரம், சட்டம் ஒழுங்கு பிரசனை அதிகரித்துள்ளது.
மக்களுக்காக எந்த திட்டமும் இல்லை. பொய் வாக்குறுதி அளித்து, மக்களை வஞ்சித்து வருகிறது தி.மு.க., அரசு. இந்த அரசு அகற்றப்பட வேண்டும்.
பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க, வெற்றி பெற்றால் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்பது சென்டிமெண்ட். அ.தி.மு.க., பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற கட்சியினர் நிறைய உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று வெற்றி கனியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பாதங்களில் சமர்பிக்கவேண்டும் என பேசினார்.
நகர ஜெ.பேரவை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

