/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உரம் தயாரிக்கும் கூடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
/
உரம் தயாரிக்கும் கூடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 06, 2025 03:08 AM
கடலுார் : கடலுார் அடுத்த சான்றோர்பாளையத்தில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையம், கேப்பர் மலை பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிக்காக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பணிகளை நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து நேற்று மதியம் இடத்தை அளவீடு செய்யும் பணிக்காக சென்ற சர்வேயரை பொதுமக்கள் தடுத்து, அளக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக்கூறியதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.