/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
ADDED : மார் 18, 2025 05:13 AM

விருத்தாசலம், : மும்மொழி கொள்கை எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில், தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், பாவாடை கோவிந்தசாமி, சுரேஷ், ஆசைத்தம்பி, விருத்தாசலம் நகர செயலர் தண்டபாணி, மங்கலம்பேட்டை பேரூர் செயலர் செல்வம் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் வரவேற்றார்.
இதில், அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாநில இளைஞரணி துணை செயலர் அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலர் பாலா, தலைமை கழக பேச்சாளர் எபினா மேரி ஆகியோர் பேசினர்.
மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்க பாலகிருஷ்ணன், செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தர்ம மணிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.