ADDED : டிச 23, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: நல்லுாரில் பொது கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வேப்பூர் அடுத்த நல்லுார் ஊராட்சி, ஒன்றிய தலைமையிடமாக உள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றியம் மற்றும் சார்ப்பதிவாளர் அலுவலகங்கள், அரசு கால்நடை மற்றும் வட்டார மருத்துவமனைகள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் பழமையான சிவன் கோவில் உள்ளது.
இங்கு பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக, தினசரி நல்லுார் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நல்லூரில் பொது கழிவறை வசதி இல்லை. இதனால், திறந்த வெளியிலும், சாலை ஓரங்களிலும், மக்கள் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

