/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதார் சேவை மையத்தில் பொது மக்கள் காத்திருப்பு
/
ஆதார் சேவை மையத்தில் பொது மக்கள் காத்திருப்பு
ADDED : அக் 05, 2024 04:21 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆதார் சேவை மையங்களில் பல மணி நேரம் பொது மக்கள் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
விருத்தாசலம் நகரில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய ஆதார் கார்டு, பிழை திருத்தம், மொபைல் எண் சரிபார்ப்பு, முகவரி திருத்தம் ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.
தினசரி நுாற்றுக்கணக்கானோர் வருவதால் ஆதார் சேவை மையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. பல நேரங்களில் சர்வர் குளறுபடி காரணமாக ஆன்லைன் சேவை முடக்கம் அடைந்து, பயனாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நிலை தொடர்கிறது.
மேலும், ஒவ்வொரு மையத்திலும் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால், அதிக பயனாளர்களுக்கு குறித்த நேரத்திற்குள் ஆதார் கார்டு சேவை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, விருத்தாசலம் தாலுகா அலுவலக மையத்தில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.