/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை
/
ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை
ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை
ஆற்றில் வெள்ள தடுப்புச்சுவர் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை
ADDED : பிப் 05, 2025 10:29 PM

கடலுார்; கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம், மஞ்சக்குப்பம்
காமராஜர் கூட்டரங்கில் நடந்தது.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர்
சுப்புராயன் வரவேற்றார். கடலுார் வட்ட தனியார் பஸ் தொழிலாளர் நலச்சங்க தலைவர் குருராமலிங்கம், சமூக ஆர்வலர் மன்சூர், உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன், வள்ளலார் தொண்டு மையம் ராசாதுரை முன்னிலை வகித்தனர்.
பொதுநல இயக்கத்தின் நோக்கங்களும், செயல்பாடுகளும் குறித்து வழிகாட்டு குழு, வாசிப்போர் இயக்கம் பால்கி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், கடலுார் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்ய வேண்டும், கடலுாரில் மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும். மஞ்சக்குப்பம் மைதானத்தை திறந்தவெளி மைதானமாக சீரமைத்து பாதுகாக்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றில் நீர்கடத்தும் திறனை அதிகரிக்க, ஆற்றை ஆழப்படுத்தி கரையில் பட்டாம்பாக்கம் முதல் கண்டக்காடு, தாழங்குடா வரை வெள்ளத்தடுப்பு கான்கிரீட் சுவர்கள் அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.