ADDED : அக் 01, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : ஆயுத பூஜையையொட்டி, விருத்தாசலம் பகுதிகளில் பூசணிக்காய் விற்பனை 'ஜோராக' நடக்கிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை இன்று (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் போது, வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்துக்காக பூசணிக்காய் கட்டுவது வழக்கம்.
விருத்தாசலம் பாலக்கரை, கடை வீதி, கடலுார் ரோடு, ஜங்ஷன் சாலை ஆகிய பகுதிகளில் பூசணிக்காய் அதிகளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அரியலுார், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பூசணிக்காயை கொண்டு வந்து, கிலோ ரூ. 20 முதல் ரூ.30 வரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.