/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்கள் சாதனை பள்ளி தாளாளர் பாராட்டு
/
மாணவர்கள் சாதனை பள்ளி தாளாளர் பாராட்டு
ADDED : அக் 22, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அறிவியல் கண்காட்சி மற்றும் செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்களை, நிர்வாகத்தினர் பாராட்டினர்.
புதுச்சேரி மாநில செஸ் போட்டியில் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர் சாய்ஸ்ரீஆதித்யா 8வது இடத்தைப் பெற்றார். மேலும், மவுண்ட் லிட்டரா பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 5 மாணவர்கள், கிளைப்பள்ளி ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் 2பேர், கேடயம் பெற்றனர். மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மாவீர் மல் சோரடியா மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.