/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு முதல் சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு முதல் சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு முதல் சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு முதல் சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்
ADDED : செப் 22, 2024 02:16 AM

கடலுார்: புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, கடலுார் மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை, வைகுண்ட நாயகி, ஹேமாள்புஜ வல்லி தாயார் சமேத தேவசாமி சாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, காலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பக்தர்கள் ஆயிரக்கணக்கில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதே போன்று, புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவில், திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலை அத்திமரத்தாலானது. இக்கோவிலில் நேற்று உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் பாமா ருக்குமணி சமேதராய் திருமலை திருப்பதி சீனுவாச பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் உள்ள செங்கமல தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை சுப்ரபாத தேவை, திருமஞ்சனம், காலை 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதேபோல், சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், முகாசபரூர் வரதராஜபெருமாள் மற்றும் காட்டுப்பரூர்ஆதிகேசபெருமாள்சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.