/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு
/
பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு
ADDED : செப் 18, 2025 03:37 AM

விருத்தாசலம்: புரட்டாசி மாதம் துவங்கியதை முன்னிட்டு, விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை 5:30 மணிக்கு சுப்ரபாத சேவை துவங்கியது. தொடர்ந்து தோமாலை சேவை, ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 8:30 மணிக்கு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையான் அலங்காரமான திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார்.
வரும் 20ம் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
இதேபோல், சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மேலகோட்டை வீதி சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.