/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய இருதய பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
துாய இருதய பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 20, 2025 06:37 AM

சேத்தியாத்தோப்பு: வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் அரசு உதவிப் பெறும் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 129 பேர் எழுதினர். 64 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
மாணவி ஆண்ட்ரியா 491 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாணவர்கள் தீபக் 483 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மணிகண்டன் 474 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர். மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் அகஸ்டின், நினைவுப் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் தேவராஜன், தமிழ் ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.