sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விரைவு சிறப்பு தரிசன முறை தெய்வீக பேரவை கோரிக்கை

/

 விரைவு சிறப்பு தரிசன முறை தெய்வீக பேரவை கோரிக்கை

 விரைவு சிறப்பு தரிசன முறை தெய்வீக பேரவை கோரிக்கை

 விரைவு சிறப்பு தரிசன முறை தெய்வீக பேரவை கோரிக்கை


ADDED : பிப் 09, 2026 03:46 AM

Google News

ADDED : பிப் 09, 2026 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்துள்ள விரைவு சிறப்பு தரிசன முறையை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ராதா அளித்த மனு:

தமிழகத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்களின் நலன்கருதி, தினசரி 500 பேர் திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அனுமதி சீட்டு பெற்று உணவு, முடி காணிக்கை, விரைவு தரிசனம் செய்து ஒரே நாளில் வீடு திரும்ப சுற்றுலா கழகம் மூலம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.

கடந்த ஓராண்டாக விரைவு சிறப்பு தரிசன முறைக்கு வழங்கப்பட்ட அனுமதியை, திருப்பதி தேவஸ் தானம் நிறுத்தி வைத்துள்ளது.

எனவே, தமிழக அரசு, விரைவு சிறப்பு தரிசன முறையை மீண்டும் அமல்படுத்த தேவஸ்தான நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us