/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
/
ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
ADDED : நவ 22, 2025 05:41 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை இணைப்புகளில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரமாக நடந்தது.
சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
இவ்வழியாக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
கல்வி, மருத்துவம், வணிகம் என தினசரி ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் நடைமேடைகளை இணைக்கும் பாதையில் உள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சிமென்ட் கட்டைகளை அகற்றி, தண்டவாள இணைப்புகளை முழுவதுமாக அகற்றி, புதிதாக பொறுத்தப்படுகிறது.
மேலும், அங்கிருந்த ஜல்லிகளை அகற்றிவிட்டு, புதிதாக ஜல்லிகள் கொட்டி நிரப்பி, கிளிப்புகள் எனப்படும் தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகளை இணைக்கும் கொக்கிகள் புதிதாக பொறுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே ஊழியர்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

