/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்கள் அறிவியல் போட்டியில் சாதனை
/
பள்ளி மாணவர்கள் அறிவியல் போட்டியில் சாதனை
ADDED : நவ 22, 2025 05:41 AM

பண்ருட்டி: கடலுார் ரோட்டரி சங்கம், எக்விடாஸ் மேல்நிலைப்பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று, கடலுார் எக்விடாஸ் மேல்நிலைப் பள்ளியில், நடந்தது. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில் ஜூனியர் பிரிவில் 7 ம் வகுப்பு மாணவி முபீதா மற்றும் தஸ்லிம் பாத்திமா ஆகியோர் 2ம் இடமும், சீனியர் பிரிவில், 9ம் வகுப்பு மாணவர் ரோஹித், விக்னேஷ் குமார் ஆகியோர், 2ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ரவி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

