/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் உபயோகிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ரயில் உபயோகிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : மே 27, 2025 06:55 AM

பண்ருட்டி : சங்க தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நரேஷ் வரவேற்றார்.
சங்க கோரிக்கைகளை ஏற்று புதிய பயண சீட்டு அலுவலகம் அமைத்தது. நடைமேடைகளை புதுப்பிக்கும் பணிகளை துவக்கியதற்கு திருச்சி ரயில்வே மண்டல மேலாளருக்கு நன்றி தெரிவிப்பது.
பண்ருட்டி ரயில் நிலையத்தில் புதிய ரயில் சேவைகள் பெறுவது தொடர்பாக திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகளை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.
ரயில் நிலையம் செல்லும் வாலாஜா வாய்க்கால் குறுக்கே புதிய பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகளை துவக்க தயாராக உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

