/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒப்புக்கு சீர் செய்யப்பட்ட ரயில்வே கேட் சாலை
/
ஒப்புக்கு சீர் செய்யப்பட்ட ரயில்வே கேட் சாலை
ADDED : ஜன 20, 2025 05:01 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க பயன்படும் சாலையை பெயரளவுக்கு சரி செய்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இந்த சாலை மேடு பள்ளமுமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன.சர்க்கரை ஆலை கரும்பு அரவை சமயத்தில் தினமும் பல நூறு மாட்டு வண்டிகளில் கரும்பை ஏற்றி கொண்டு இந்த சாறலையை கடந்து செல்வார்கள். சாலை மேடும் பள்ளமுமாக இருப்பதால் மாடுகள் அடிக்கடி தடுக்கி விழுந்து காயமடைகின்றன.இந்த சாலையை சரி செய்ய வேண்டுமென ரயில்வே துறையிடம் மக்கள் மனு அளித்திருந்தனர்.
நேற்று சிறிய ஜல்லிகளை போட்டு பெயரளவுக்கு சாலையை சரி செய்தனர்.தற்காலிகமாக சரி செய்த சாலை ஓரிரு நாட்களில் பெயர்ந்து விடும் நிலையிலேயே போட்டுள்ளனர்.
எனவே முறையாக சாலையை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.