/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே கேட்கீப்பர் மீது கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைப்பு புதிய கேட் கீப்பர் நியமனம்

ADDED : ஜூலை 10, 2025 12:40 PM
கடலுார்: செம்மங்குப்பம் ரயில்வே கேட்கீப்பர் பங்கஞ் சர்மா மீது கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் தொண்டமாநத்தம் கிராமத்தை
சேர்ந்த மாணவர்கள் நிமிலேஷ், சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சாருமதி, செழியன் ஆகியோர் பலியாகினர். விஸ்வேஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அண்ணாதுரை அறுந்து தொங்கிய மின் கம்பியில் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர சம்பவத்திற்கு காரணமான கீட் கீப்பர் பங்கஞ் சர்மா மீது 105, 106, 125 ஏ, 125 பி, பி.என்.எஸ் 151 ( குற்றமற்ற கொலை, அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல், மற்றும் பிறரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட
குற்றச்சாட்டுகள்) இந்திய ரயில் வே சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன்பேரில் கேட் கீப்பர் பங்கஞ்சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதிய கேட் கீப்பர் நியமனம்
ரயில்வேதுறை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் கேட் கீப்பர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், விபத்து நடந்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு திருத்தணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.