/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை பாதிப்பு பயிர்கள்; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
மழை பாதிப்பு பயிர்கள்; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 07, 2024 06:54 AM

குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, மாவட்டத்தில் கன மழை பெய்தது. மழையால், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார், 5 ஆயிரம் எக்டேர் சம்பா நெல், 411 எக்டேர் மணிலா, 280 எக்டேர் பன்னீர் கரும்பு பாதிப்பு ஏற்பட்டது. இவற்றை நேற்று வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல் பயிர்களில் மகசூல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான ஆலோசனைகள், நோய் தடுப்பு வழிமுறைகள், மணிலா வேர் அழுகல் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பன்னீர் கரும்பு புணரமைப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன், குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண் அலுவலர் வேல்முருகன், துணை வேளாண் அலுவலர் முதியன், உதவி வேளாண் அலுவலர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.