/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையின் குறுக்கே மழைநீர்: மக்கள் அவதி
/
சாலையின் குறுக்கே மழைநீர்: மக்கள் அவதி
ADDED : மே 20, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மழைநீர் சென்றதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஏரி, குளங்கள், ஓடைகள், ஆறு ஆகியவற்றில் நீர்வரத்து துவங்கி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெண்ணாடம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, வடகரை - நந்திமங்கலம் இடையே சின்னாத்துார் வாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலையின் குறுக்கே மழைநீர் சென்றதால் நேற்று வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.