/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீர் தேங்குவதால் சம்பா விதைப்பு பாதிப்பு பாசன வாய்க்காலை துார்வாரும் பணி தீவிரம்

ADDED : அக் 24, 2025 03:19 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் மழைநீர் தேங்குவதால் சம்பா விதைப்பு பாதிப்பதை தடுக்கும் வகையில், விவசாயிகளே பாசன வாய்க்கால்களை துார்வாரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் மழை குறைவாக இருந்தாலும் விளைநிலங்களில் வழக்கம்போல தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாசன வாய்க்கால்களில் காட்டாமணி, சம்பு, கோரை புற்கள் முளைத்து துார்வாரப்படாததால் தண்ணீர் வழிந்தோட வழியின்றி மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விளை நிலங்களில் தேங்கிறது.
விருத்தாசலம் புறவழிச்சாலை, சித்தலுார், மணவாளநல்லுார் பகுதிகளில் விளைநிலங்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் பாசன வாய்க்கால்களை தங்களது சொந்த செலவில் பொக்லைன் வைத்து துார்வாரும் பணியில் விவ சாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பருவகால மழை முன்னெச்சரிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தாலும், விவசாயிகள் பாதிப்பது தொடர்கிறது. இனி வருங்காலங்களில் மழை காலத்திற்கு முன்னதாக பாசன வாய்க்கால்கள், நீர்நிலைகளை துார்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.