/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு
/
சப்வேயில் மழைநீர் தேக்கம் கிராம மக்கள் பாதிப்பு
ADDED : ஜன 09, 2025 12:43 AM

பரங்கிப்பேட்டை,; பரங்கிப்பேட்டை அருகே, நான்கு வழிச்சாலை சப்வேயில் மழைநீர் தேங்கி நிற்பதால், இரு கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்- நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து தீர்த்தாம்பாளையம் கிராமத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்றுவர வசதியாக சப்வே அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் பெய்த கன மழையின்போது தண்ணீர் சப்வேயில் தேங்கியுள்ளது. இதனால், தீர்த்தாம்பாளையம் மற்றும் பு.முட்லுார் கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வந்துச்செல்ல கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சப்வேயில், தேங்கியுள்ள மோட்டார் மூலம் அகற்ற நகாய் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களின் பாதிப்பு தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

