/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 21, 2025 08:17 AM

கடலுார்: முன்னாள் பிரதமர் ராஜிவின் 81வது பிறந்த நாள் விழா கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் நேற்று நடந்தது.
இந் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் ராஜிவ் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, 100 பேர்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துறைமுகம் ஆறுமுகம், பார்த்திபன் செயலாளர்கள் செல்வகுமார் ஜெயபால் வினு சக்கரவர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கலையரசன் , மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி., மாநில பொதுச் செயலாளர் ராமராஜ், இளைஞர் காங்., மாவட்ட துணை தலைவர் ரஞ்சித், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ரஹீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பஷீர்அகமது , வட்டாரத் தலைவர் ராஜாராமன்உட்பட காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.