/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறமை மாணவர்களை உருவாக்கும் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளி
/
திறமை மாணவர்களை உருவாக்கும் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளி
திறமை மாணவர்களை உருவாக்கும் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளி
திறமை மாணவர்களை உருவாக்கும் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளி
ADDED : அக் 01, 2025 01:36 AM

காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி வருகிறது.
இப்பள்ளி கடந்த 2011ம் கட்டடக்கலை நிபுணரான, இப்பள்ளியின் நிறுவனருமான மணிரத்தினம் மற்றும் தாளாளர் சுதா மணிரத்தனம் ஆகியோரால் துவங்கப்பட்டது.
இங்கு, 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சிறப்பம்சமாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள், 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. பள்ளியில், ஒவ்வொரு மாதமும் இறுதியில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு பொது அறிவு, நடனம், ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், ஹிந்தி, சிலம்பம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அனைத்திலும் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கி வருகின்றனர்.