
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளையொட்டி பாலக்கரையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத், நிர்வாகிகள் லட்சுமணன், மாசிலாமணி, மணிவண்ணன், ஜோதி முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உ றுப்பினர் செந்தில்வேலன், பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் வக்கீல் செல்வகுமார், நிர்வாகிகள் சையத்ஜாபர், ராமலிங்கம், ராமதாஸ், கோவிந்தராஜ் பங்கேற்றனர்.