/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் ராமர் பட ஊர்வலம்
/
பரங்கிப்பேட்டையில் ராமர் பட ஊர்வலம்
ADDED : ஜன 22, 2025 11:45 PM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில் நேற்று ராமர் பட ஊர்வலம் நடந்தது.
உத்திரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் கடந்தாண்டு புதியதாக ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக தினமான நேற்று பரங்கிப்பேட்டை அகரத்தில், ராமர் பட ஊர்வலம் வழக்கறிஞர் மணிமாறன் தலைமையில், நடந்தது. ஊர்வலம், அகரம் நரசிம்மபெருமாள் கோவிலில் இருந்து துவங்கி, பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் ராமர் பஜனை மடம், பெரியக்கடை வரை சென்று மீண்டும் கோவில் வந்தடைந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, பா.ஜ., ஒன்றிய தலைவர் சுரேஷ், சந்தானகிருஷ்ணன், பஜனை குழுவினர்கள் செல்வராஜ், அண்ணாமலை, ராமச்சந்திரன், செல்லத்துரை, ராஜா, கொளஞ்சி, சாம்பசிவம், ராஜசேகர், சங்கர், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

