ADDED : ஏப் 09, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் வரும் 12ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சுவாமி சன்னதியில் கடந்த 6ம் தேதி ராமநவமியையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தினமும் காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
வரும் 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு ராமர் பட்டாபிேஷகமும் நடக்கிறது.
பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.