ADDED : ஏப் 07, 2025 05:11 AM

கடலுார்,: மாவட்டத்தின் பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் ராமநவமி உற்சவம் நடந்தது.
கடலுார்: மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெரு கோதண்டராமர் பெருமாள் கோவிலில் 103ம் ஆண்டு ராமநவமி மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனையொட்டி கோவிலில் கோதண்டராமர், சீத்தாதேவி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7ம் தேதி) 2ம் நாள் உற்சவத்தில் பரதநாட்டியம், 8ம் தேதி சீதா திருக்கல்யாணம், 9ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 10ம் தேதி ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், 11ம் தேதி சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை பக்த பாத துாளிதர்கள் அமைப்பு மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டில் 48 அடி உயர காரியசித்தி ஆஞ்சநேயர், விருத்தாசலம், மேலக்கோட்டை சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது. சிதம்பரம் தெற்கு சன்னதியல் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி உற்சவம் நடந்தது.