ADDED : ஏப் 17, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி கண்ணன் கோவிலில் ராமநவமி உற்சவம் நிறைவு பெற்றது.
புவனகிரி கண்ணன் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது. 7ம் நாள் ராமர் திருக்கல்யாணம், 10ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. நிறைவு நாளான நேற்று ஆஞ்சநேய விடையாற்றி உற்சவத்தையொட்டி இளைஞர்கள், சிறுவர்கள், பிருந்தாவன கோலாட்டம் ஆடினர்.
தொடர்ந்து, சிறப்பு பஜனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.