/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமதாஸ் பிறந்த நாள்: பா.ம.க., ரத்த தானம்
/
ராமதாஸ் பிறந்த நாள்: பா.ம.க., ரத்த தானம்
ADDED : ஜூலை 25, 2025 02:44 AM

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., பசுமைதாயகம், வடக்குத்து ரோட்டரி சங்கம், மாவட்ட ரத்த வங்கி சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் 87வது பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த முகாமில், பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன் வரவேற்றார். பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் ராம முத்துக்குமார், பாட்டாளி சமூக ஊடகப்பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
முகாமில் பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து 87 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தனசேகரன் செல்வராஜ், பாலகுரு, சிவமணி, ஸ்ரீதரன், கிரீன் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் சுரேந்திரன், பா.ம.க., மாநில துணைத் தலைவர் கோவி ராமலிங்கம், ஏழுமலை, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் கலை உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட சுகாதார பிரிவு குருதிக் கொடையாளர் அமைப்பின் மேற்பார்வையாளர் கதிரவன் தலைமையில் டாக்டர்கள் ஸ்ரீதரன், விஜயராகவன் உள்ளிட்ட குழுவினர் 87 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனர்.