ADDED : பிப் 21, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் தணிகைவேல் மணியரசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கடலுார் கல்வி மாவட்ட அலுவலர் சங்கர் பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பிரசன்னா செந்தில்குமார், மூத்த குடிமக்கள் அமைப்பு அருள்ஜோதி, கவிஞர் பால்கி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.
உதவி தலைமை ஆசிரியர் நவநீத சங்கர் நன்றி கூறினார்.