/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட விளையாட்டு போட்டி; ராணி சீதையாச்சி பள்ளி வெற்றி
/
குறுவட்ட விளையாட்டு போட்டி; ராணி சீதையாச்சி பள்ளி வெற்றி
குறுவட்ட விளையாட்டு போட்டி; ராணி சீதையாச்சி பள்ளி வெற்றி
குறுவட்ட விளையாட்டு போட்டி; ராணி சீதையாச்சி பள்ளி வெற்றி
ADDED : ஆக 21, 2025 09:51 PM

சிதம்பரம்; சிதம்பரத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டியில் வென்ற ராணி சீதையாச்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைதானத்தில் ஏ.ஆர்.ஜி., பள்ளி சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் என மூன்று பிரிவுகளிலும், 20 குழு போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பேர்வின் வில்லியம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் சுடர்விழி வரவேற்றார். அரிமா சங்க மண்டல ஆளுநர் சுவேதகுமார், சிதம்பரம் ஹோஸ்ட் லயன் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் தர்பாரண்யன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
உதவி தலைமை ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.