/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் அட்டை வகை மாற்றம்; கலெக்டர் தகவல்
/
ரேஷன் அட்டை வகை மாற்றம்; கலெக்டர் தகவல்
ADDED : ஆக 07, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; ரேஷன் அட்டையை பொருளில்லா ரேஷன் அட்டையாக வகை மாற்றம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது செய்திக்குறிப்பு:
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்களிடம் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில், ரேஷன் அட்டைதாரர்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக பொருளில்லா ரேஷன் அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம்.