ADDED : டிச 28, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: ராமநத்தத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் போலீசார் நேற்று முன்தினம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என்., 48 பிசி 8191 பதிவு எண் கொண்ட பொலிரோ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது. உடனடியாக, ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, திருச்சியைச் சேர்ந்த கண்பதிரன், 29; என்பவரை கைது செய்தனர்.

