/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரமற்ற காலை உணவு வழங்கல் துாய்மை பணியாளர்கள் புகார்
/
தரமற்ற காலை உணவு வழங்கல் துாய்மை பணியாளர்கள் புகார்
தரமற்ற காலை உணவு வழங்கல் துாய்மை பணியாளர்கள் புகார்
தரமற்ற காலை உணவு வழங்கல் துாய்மை பணியாளர்கள் புகார்
ADDED : டிச 28, 2025 05:56 AM
நெல்லிக்குப்பம்: தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் நிரந்தர ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், சுகாதார வளாக பராமரிப்பாளர்கள் என 165 பேருக்கு தினமும் காலை உணவு வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு 10 லட்சம் என 3 ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கியது. இதில் பணியாளர்கள் வேலை செய்யும் இடத்துக்கு சென்று உணவு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்குவதில்லை.
மேலும் ஒரு சில நாட்கள் மட்டுமே சுவையான உணவு வழங்கியதாகவும், தற்போது தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி நெல்லிக்குப்பம் பகுதி துாய்மை பணியாளர்கள் கூறியதாவது;
இட்லி வரட்டி போல் உள்ளது. வடையால் அடித்தால் மண்டை உடைந்து விடும் அளவுக்கு மோசமாக உள்ளது. உணவு தரமில்லாமலும் சுவையில்லாமலும் வழங்குகின்றனர். அதுவும் போதுமான அளவுக்கு தரவில்லை.
நாங்களே குறிப்பிட்ட இடத்துக்கு சென்று வாங்க வேண்டியுள்ளதால் வேலை பாதிக்கிறது. அடிக்கடி நகராட்சி ஆணையர், சேர்மன் இந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து சுவையாக வழங்க வேண்டும். உணவுக்காக அரசு செலவிடும் தொகையை துாய்மை பணியாளரிடம் நேரடியாக வழங்கினால், நாங்களே தேவையான உணவை வாங்கி சாப்பிடுவோம் என கூறினர்.

