/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை திறப்பு; எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
ரேஷன் கடை திறப்பு; எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2025 08:31 AM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில், தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். புதிய ரேஷன் கடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பேசினார்.
விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஹாஜா நஜிமுதின் சேட், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், இளைஞரணி செயலாளர் சங்கர், இளைஞரணி துணை செயலாளர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் தன கோவிந்தராஜன், ராஜதுரை, கமலகண்ணன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.