/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெங்கடாம்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு
/
வெங்கடாம்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு
ADDED : அக் 15, 2025 11:11 PM

நெய்வேலி அக்.16-: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வெங்கடேம்பேட்டை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
நெய்வேலி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன், கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து மக்களுக்கு அரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இதில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா.பாலமுருகன், தலைவர் வீரராமச்சந்திரன், பாச்சாராபாளையம் கூட்டுறவு சங்க செயலாளர் அமுதா, டி.எஸ்.ஓ., செல்வமணி, ஜோதிமணி, தீனதயாளன், சரண்யா, மாவட்ட பிரதிநிதி ராமன், கணேசன், கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.