ADDED : அக் 15, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையில் காந்தியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் தேவநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சக்திவேல் தொடக்கவுரை ஆற்றினார்.
தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் வணிகவியல் துறைத் தலைவர் விஜயராமலிங்கம் காந்தியின் தென்னாப்பிரிக்க பயண அனுபவங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் பயணித்த முக்கிய இடங்கள் குறித்த காணொளி திரையிடப்பட்டது.
கருத்தரங்கில் சிதம்பரம் காந்தி மன்றத் தலைவர் ஞானம், துணை செயலாளர் முத்துக்குமரன், மன்ற உறுப்பினர்கள் சின்னதுரை, சீனுவாசன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.