ADDED : அக் 15, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பழனியம்மாள், 50; இவர் கடந்த 9ம்தேதி இரவு 9:00 மணியளவில் வீட்டு வாசலில் நடந்து வந்தபோது, பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணியளவில் இறந்தார்.