UPDATED : நவ 23, 2026 08:12 PM
ADDED : நவ 23, 2026 08:12 PM

அ நிறம் | அளவு
கடலுார்: ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை சுயஉதவிக்குழு பெண்களை கொண்டு தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசுஅறிவித்தது. அதனை கண்டித்து ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார், தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். தேவராஜ், செல்லதுரை, தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர், மாநிலத்தவைர் ஜெயச்சந்திராஜா, டாக்பியா சேகர், கூட்டுறவு ஊழியர் சங்கம் மாநில தலைவர் சேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நல்லத்தம்பி, சுந்தர்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
