வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் மாணவர்களுக்கு பரிசளிப்பு
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் மாணவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : செப் 18, 2026 10:04 PM
ADDED : செப் 18, 2026 09:32 PM
சிதம்பரம்:
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் நடந்த இணைய வழி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற 'சிறு வயதிலேயே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழிகள் என்ன' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி இணைய வழியில் நடந்தது.
இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அதில், சிறப்பிடம் பெற்ற பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரம்லாபரகா, சபியா மாரியா, சென்னை தியாகராய நகர், செ.தெ. நாயகம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் நரேஷ் குமார், பாரதி ஆகியோர் சிறப்பிடம் பிடித்தனர்.
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி , தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு சார்பில், அவர் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.
வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.
