ADDED : செப் 18, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கட்டுமான பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், உச்சிமேட்டைச் சேர்ந்தவர் சிவராஜ்,32; பில்டிங் காண்ட்ராக்டர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரின் புதிய வீட்டை கட்டி வருகிறார். கடந்த 16ம் தேதி சிவராஜ் கட்டுமான பொருட்களை கட்டுமான வேலை நடந்து வரும் வீட்டில் வைத்து விட்டு பூட்டிச் சென்றார். நேற்று முன்தினம் காலை சென்று பார்த்த போது, கட்டிங் மிஷன்–1, மரக்கட்டில் –1, ஒயர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
