/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் வாசிப்பு திறன் ஆய்வு
/
அரசு பள்ளியில் வாசிப்பு திறன் ஆய்வு
ADDED : ஏப் 10, 2025 01:31 AM
காட்டுமன்னார்கோவில்: கீழப்பருத்திக்குடி அரசு பள்ளியில் வாசிப்பு திறன் ஆய்வு நடந்தது.
குமராட்சி அடுத்துள்ள, கீழப்பருத்திக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100 சதவீதம் வாசிப்பு திறன் ஆய்வு நடைபெற்றது. அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல் கழித்தல் பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றில் மாணவர்களை சோதித்தறியும் நிகழ்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் ஜெனித் ஜெயச்சந்தர் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன் பங்கேற்று மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை ஆசிரியர்கள் கீதாரீட்டா, தமிழ்மதி, செந்தமிழ் செல்வி , முத்தமிழ்செல்வி , சில்வியா, ஆசிரியர் பயிற்றுநர் சம்பத்குமார், பட்டதாரி ஆசிரியர் சத்தியசீலன், குளோரி ஸ்டெல்லா, அஜய, வி.ஏ.ஓ., ராஜேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி காயத்ரி மற்றும் பலர் பங்கேற்றனர்.