நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரிய குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 100 நாட்களில் 100 சதவீதம் மாணவர்களுக்கான, வாசித்தல் சவால் நிகழ்ச்சி நடந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஜெயராணி முன்னிலை வகித்தார். மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் வாசித்து காண்பித்தனர். அடிப்படை கணிதம் பயிற்சி கணக்கு போட்டு காண்பித்தனர். அதைத்தொடர்ந்து ஸ்மார்ட் 'டிவி' மூலம் மாணவர்கள் கணித செயல்பாடுகள் செய்து காண்பித்தனர். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி உடனிருந்தனர்.

