/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி பள்ளியில் வாசிப்பு திறன்
/
குமராட்சி பள்ளியில் வாசிப்பு திறன்
ADDED : ஏப் 05, 2025 05:27 AM

சிதம்பரம்; குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாசிப்பு திறன் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சுகுணா தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பேசினர். முன்னாள் வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன், ஆசிரியர்கள் சிவப்பிரியா, நான்சி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை செயல்கள் குறித்து மாணவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவோம். 100 சதவீத சேர்க்கை இலக்கை அடைவோம் என உறுதிமொழி ஏற்றனர்.