/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரியல் எஸ்டேட் தொழில் நலச்சங்கம் ஆலோசனை
/
ரியல் எஸ்டேட் தொழில் நலச்சங்கம் ஆலோசனை
ADDED : மார் 22, 2025 07:28 AM

கடலுார்; கடலுார் மஞ்சக்குப்பத்தில், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் தொழிலாளர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.ஆர்.ஐ.சி., மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் கோவிந்தராஜன் வரவேற்றார். அன்னை தெரசா பொறியியல் கல்லுாரி பிரகாஷ்மல் சோரடியா, வள்ளிவிலாஸ் ஜூவல்லரி சீனிவாசன், பி.வி.,புரோமட்டர்ஸ் வெங்கடேசன், தில்லை ரியல் எஸ்டேட் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன் குமார் பேசினர். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் மருதை, மாநில செயலாளர் குமார், துணைத்தலைவர் ரஜினிராஜ், இணைசெயலாளர் நாகராஜ், அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார், சி.ஆர்.ஐ.சி., மாநில துணைசெயலாளர் செந்தமிழ் கொற்றவன், கடலுார் மண்டல தலைவர் முருகேசன், மண்டல செயலாளர் செந்தில்வேல், பொருளாளர் அருள், மாவட்டத் தலைவர் குமார், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் பாலமுருகன், துணைசெயலாளர் ஆறுமுகம், மாநில துணை பொது செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை பாதுகாக்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோரை, அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.