/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாக்பூரில் டி-10 தேசிய டென்னிஸ் பால் போட்டி வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை
/
நாக்பூரில் டி-10 தேசிய டென்னிஸ் பால் போட்டி வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை
நாக்பூரில் டி-10 தேசிய டென்னிஸ் பால் போட்டி வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை
நாக்பூரில் டி-10 தேசிய டென்னிஸ் பால் போட்டி வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை
ADDED : மே 14, 2025 11:37 PM

விருத்தாசலம்:நாக்பூரில் நடந்த டி-10 தேசிய டென்னிஸ் பால் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் அணி வெள்ளி, ஆண்கள் அணி வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
2025ம் ஆண்டிற்கான, முதல் டி-10 சீனியர் தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 9ம் தேதி துவங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த டி-10 போட்டியில், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 26 ஆண்கள் அணிகள், 20 பெண்கள் அணிகள் பங்கேற்றன.
தமிழக ஆண்கள் அணி முதல் லீக் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து, விதர்பா, குஜராத் அணிகளை வீழ்த்தி, நான்காவது லீக்கில் உ.பி., அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் மேற்கு உ.பி., அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால், துரதிஷ்டவசமாக சத்தீஷ்கர் அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றது.
தமிழக பெண்கள் அணி முதல் லீக் போட்டியில், டையூ மற்றும் டாமனை வீழ்த்தியது. இரண்டாவது லீக்கில் உ.பி., அணியை வீழ்த்தி அரையிறுதியில் ேஹாஸ்ட் அணியான விதர்பா அணியை தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியிடம் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்து.
வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற இரு அணி வீரர்களையும், தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் ஞானவேல், டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் முனிரத்னம், பயிற்சியாளர்கள் ராஜராஜசோழன், சரத்பாபு வாழ்த்தினர்.