தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியிடங்கள் குறைப்பு! கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியிடங்கள் குறைப்பு! கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியிடங்கள் குறைப்பு! கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல்


UPDATED : செப் 29, 2026 04:37 PM

ADDED : செப் 29, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 04:37 PM ADDED : செப் 29, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து பணிநிரவல் பெயரில் 46 டாக்டர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதால், கிராமப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனை மற்றும் பண்ருட்டி, புவனகிரி, வேப்பூர், பரங்கிப்பேட்டை உட்பட பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தினசரி பல ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இதில், மாவட்டத்திலேயே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மட்டுமே மருத்துவக் கல்லுாரிக்கு இணையாக தண்டுவட அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. மேலும், 300க்கும் அதிகமான மகப்பேறு அறுவை சிகிச்சைகள், பொது, பல், கண்புரை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தினசரி 1,400 புறநோயாளிகள், 350 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுவதால், 'இந்திய பொது சுகாதார தர நிலைகள்' (ஐ.பி.ெஹச்.எஸ்.,) மூலம் வடிவமைக்கப்பட்ட அளவுகோளின்படி, தற்பாது பணியில் உள்ள 29 மருத்துவர்களுக்கு பதிலாக 56 மருத்துவர்கள் பணியிடங்கள் தேவைப்படுகிறது.

தற்போதைய மருத்துவர் பணியிடங்கள் விபரம் தாலுகா மருத்துவமனைகளில் விருத்தாசலத்தில் 2005ல் சீமாங் சிறப்பு மருத்துவ பிரிவு துவங்கியது. இதில், 4 குழந்தைகள் மருத்துவர், 3 மயக்க மருந்து நிபுணர், 5 மகப்பேறு மருத்துவர், 1 ஸ்கேன் என சீமாங் பிரிவுக்கு 13 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

பொது பிரிவில் 1 பல், 3 முதன்மை குடிமை மருத்துவர்கள் (நிர்வாக பணியுடன் சிகிச்சை), தினசரி அறுவை சிகிச்சையில் 3 முதல் 4 மருத்துவர்கள் வீதம் பணிபுரிகின்றனர். மீதமுள்ள 5 மருத்துவர்கள் வாயிலாக 1,400 புறநோயாளிகள், உள் நோயாளிகள் கவனிக்கப்படுகின்றனர்.

மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிக்கலான முடநீக்கியல், மகப்பேறு அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரில் 4 ஆயிரம் ரூபாய்க்கு எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ., ஸ்கேனும், காப்பீடு திட்டத்தில் எடுக்கப்படுவதால், மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவர்கள் வார விடுப்பு, மாத விடுப்பு, உடல்நலக்குறைவு என யாரேனும் விடுப்பில் சென்றால், கூடுதல் பணியாக செய்வதால், மருத்துவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வடைகின்றனர்.

'அன்றே சொன்ன தினமலர்' மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்தாண்டு விரிவாக செய்தி வெளியானபோது, அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் வாயிலாக விரைவில் கூடுதல் மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. அதுபோல், இட பற்றாக்குறையை சுட்டிக்காட்டியதால், நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.5.45 கோடியில் 5 அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

46 மருத்துவர்கள் குறைப்பு: இந்நிலையில், கிராமப்புற நோயாளிகள் தலையில் இடி விழுவதுபோல, அரசாணை 113, வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அரசாணை 113ன் படி, மருத்துவப் பணியிடங்கள் நெறிப்படுத்துதல் அடிப்படையில் நோயாளிகளின் படுக்கைகள் விகிதாச்சாரம் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்படுவதாக கூறுகிறது.

இதன்படி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தற்போது பணிபுரியும் 29 மருத்துவர்களில் 10 பேரை குறைத்து, 19 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல், கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 96 பேருக்கு பதிலாக 75 மருத்துவர்களாக குறைக்கப்பட உள்ளது.

இதுபோல், திட்டக்குடி 19க்கு பதிலாக 15, சிதம்பரம் 25க்கு பதிலாக 18, குறிஞ்சிப்பாடி 14க்கு 13 உட்பட பண்ருட்டி, புவனகிரி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் 46 மருத்துவர்கள் வரை குறைக்கப்பட உள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைப்பதில் தாமதமும், சிகிச்சை குறைபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே, கிராமப்புற நோயாளிகள் அதிகம் பயன்பெறும் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக மருத்துவர், செவிலியர் பணியிடங்களை உருவாக்கப்பட வேண்டும். மாறாக, பணி நிரவல் என்ற பெயரில் மருத்துவப் பணியிடங்களை குறைப்பதால், கிராமப்புற நோயாளிகள் மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூறை, போராட்டம்: தற்போதைய மருத்துவர்கள் பணியில் உள்ளபோதே, சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதாக கூறி இரவு நேரங்களில் நோயாளிகளுடன் வரும் உறவினர்களால் மருத்துவமனையில் உபகரணங்கள், ஜன்னல், கதவுகளில் கண்ணாடிகள் உடைப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் சிகிச்சையில் தாமதம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us