தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதையில் 35 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

விருதையில் 35 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

விருதையில் 35 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு


ADDED : செப் 29, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சுற்றித்திரிந்த 35 குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

விருத்தாசலம் பெரியார் நகர் வடக்கு, தெற்கு பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும் எம்.எல்.ஏ., அலுவலகம், தனியார் பள்ளிகள், வங்கிகள், தீயணைப்பு நிலையம் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் சுற்றித்திரியும் நுாற்றுக்கணக்கான குரங்குகள், குடியிருப்புகளுக்குள் நுழைந்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தின. இது குறித்து குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொது மக்கள் பிரேமலதா எம்.எல்.ஏ.,விடம் மனு அளித்தனர்

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர் பசுபதி தலைமையில் வனவர் விஜயகிருஷ்ணன், வனக்காப்பாளர் அலெக்சாண்டர் உள்ளிட்ட குழுவினர் கூண்டுகள் மூலம் வடக்கு பெரியார் நகரில் சுற்றித்திரிந்த 35 குரங்குகளை பிடித்து, கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் விட்டனர்.

எம்.எல்.ஏ., நேர்முக உதவியாளர் குமார், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், ஜெகதீசன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us