ADDED : செப் 29, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம், செப். 30–
புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலை பெண்ணையாற்றின் கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகிக்கும் வகையில் நடந்து வந்தவரை நிறுத்தி, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 50 புதுச்சேரி மாநில சாராய பாக்கெட் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, சாராயம் கடத்தி வந்த நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் குரு,46; என்பவரை கைது செய்தனர்.
