/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் வீரர்களுக்கு பதிவுச்சான்று
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் வீரர்களுக்கு பதிவுச்சான்று
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் வீரர்களுக்கு பதிவுச்சான்று
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் வீரர்களுக்கு பதிவுச்சான்று
ADDED : ஜூலை 25, 2025 10:59 PM

விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வான வீரர்களுக்கு பதிவுச்சான்று வழங்கப்பட்டது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், அண்ணாமலைப் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல விளையாட்டுப் போட்டி மற்றும் முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது.
அதன்படி, முதற்கட்டமாக உள் அரங்கப் போட்டிகளான குத்துச்சண்டை, பென்சிங், ஜூடோ, சதுரங்கம், கேரம் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேர்வு நடந்தது. அதில், தேர்வான வீரர், வீராங்கனைகளின் விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி சார்பில் முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் பதிவுச்சான்றிதழை வழங்கி, வாழ்த்தினார். உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், பேராசிரியர் பரமசிவன் உடனிருந்தனர்.
வரும் 8ம் தேதி வரை, கல்லுாரி பின்புறம் உள்ள மினி ஸ்டேடியத்தில் கைப்பந்து, கபடி, ஹாக்கி, வாலிபால், கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு நடக்கிறது.